தமிழ்நாடு

சுருளி அருவி அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன், 4 நாய்கள் பலி

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவி அருகே மின்சாரம் தாக்கி 16 வயது சிறுவன் உள்பட 4 நாய்களும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளி வனப்பகுதி அருகே வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், ஒருவர் இறந்து கிடப்பதும், அருகருகே  4 நாய்கள் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர். இது பற்றி வனத்துறை, ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உத்தமபாளையம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ந.சின்னக்கண்ணு, காவல் ஆய்வாளர் கே.சிலைமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். விசாரணையில் இறந்து கிடந்த நபர் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த பரமன் மகன் தினேஷ்(16) என்றும், பால் வியாபாரம் செய்து வருபவர் என்றும், அவரது அருகில் இறந்து கிடந்தது, வேட்டைக்கு செல்லும் நாய்கள் என்று தெரிய வந்தது.  அதற்குள் இறந்த சிறுவனின் உறவினர்கள் கூடினர். போலீசார் சிறுவனின் உடலை எடுக்க விடாமல், இறந்த காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  வாக்குவாதம் செய்தனர்.

துணைக்காவல் கண்காணிப்பாளர் ந.சின்னக்கண்ணு அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி, இறந்த சிறுவன் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தார்.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறும் போது: சுருளி மலை அடிவாரப்பகுதியில் விளை நிலங்கள் உள்ளன. இந்த விளை நிலங்களில் மான், யானை, பன்றி, கரடி போன்றவை இரவு நேரங்களில் இரை தேவைக்காக உள்ளே புகுந்து சாப்பிடுவதோடு, பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. அதனால் நில உரிமையாளர்கள், அனுமதியின்றி, விளை நிலங்களைச் சுற்றி மின்சார வேலி அமைத்து, இரவில் இணைப்பு கொடுத்து விட்டு, காலையில் வந்து துண்டித்து விடுவர். அதே நேரத்தில் சிறுவனுடன் சிலர் 4 நாய்களுடன் வன விலங்குகளை வேட்டையாட சென்றுள்ளனர். 

அப்போது மின்சாரம்  தாக்கி இறந்திருக்கலாம். இது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது, உடன் சென்றவர்கள் யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இறந்த 4 நாய்களும் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு விசாரணை செய்யப்படும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT