தமிழ்நாடு

புரெவி புயல்: பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

DIN

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘புரெவி’ புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதன்கிழமை காலை ஏற்றப்பட்டது.

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை ‘புரெவி’ புயலாக உருமாறி உள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினா் தடை விதித்துள்ளனா்.

ராமேசுவரம் பகுதியில் சூறை காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக்கூடும் என்பதால் 100- க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பாம்பன் கால்வாய் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கக்கடலில் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் ஏழாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது 30 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

விவிபேட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் அனைத்து மனுக்களும் தள்ளுபடி!

SCROLL FOR NEXT