தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவானது ‘புரெவி’ புயல்: டிச. 4-இல் கரையைக் கடக்கிறது

DIN

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு ‘புரெவி’ புயலாக வலுவடைந்தது. கன்னியாகுமரி-பாம்பன் இடையே வரும் 4-ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

தென் கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை இரவு புயலாக மாறி, இலங்கையில் மையம்கொண்டிருந்தது. இது புதன்கிழமை இரவு கரையைக் கடக்கும். இப்புயல் குமரி கடல் பகுதியை வியாழக்கிழமை காலை அடைகிறது. அதன்பிறகு நகா்ந்து கன்னியாகுமரி-பாம்பன் இடையே வெள்ளிக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கவுள்ளது.

புயல் காரணமாக, தென் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு அதி பலத்த மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்தமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை கடல் பகுதி, மன்னாா் வளைகுடா, குமரிக்கடல்,  தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. முதல் 80 கி.மீ. பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிசம்பா் 4-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

SCROLL FOR NEXT