தமிழ்நாடு

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அண்ணா பல்கலை. கட்டணம் வசூலித்தது செல்லும்: உயர்நீதிமன்றம்

DIN


சென்னை: ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக்கழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தின் காரணமாக இறுதி ஆண்டு பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்து பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காகத் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் தரப்பிலும்,  தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கத்தின் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின்போது மனுதாரர்கள் தரப்பில், கேள்வித்தாள் தயாரிக்க ஏற்பட்ட செலவுகள், தேர்வுத்தாளுக்கான செலவு என ரூ.1,500 வீதம் செலுத்த மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

தேர்வு நடத்தப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு ரூ.42 என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 4 லட்சம் மாணவர்களிடமிருந்து ரூ. 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக வாதிடப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழக தரப்பில் வாதிடும்போது, "மார்ச் 27- ஆம் தேதிக்கு முன்பே கல்லூரிகள் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை வசூலித்துவிட்டன. கட்டணத்தைப் பொருத்தவரை தேர்வுக்கு முந்தைய, பிந்தைய செலவு என சில வகைகள் உள்ளன. தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், மதிப்பெண் சான்றிதழ்களைத் தயாரித்து கல்லூரிகளுக்கு அனுப்பி வைப்பது போன்ற செலவுகள் உள்ளதாக வாதிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவில், "தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது' எனக்கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், "ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் உத்தரவு செல்லும். எனவே மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தை 4 வாரங்களில் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் செலுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

SCROLL FOR NEXT