தமிழ்நாடு

மேட்டுப்பாளையத்தில் விவசாய பணியின் போது சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு

1st Dec 2020 02:39 PM

ADVERTISEMENT

 

மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறை கூடுதுறைமலை பகுதியில் விவசாய பணி மேற்கொண்டிருந்த போது டிராக்டரிலிருந்து சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி கூடுதுறைமலை சுக்கு காப்பி கடை பகுதியை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன் விஜயகுமார் (12). இவர்  வெல்ஸ் புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் விஜயன் (27). டிரைவர். இவர் நெல்லித்துறை நந்தவன புதூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான விளை நிலத்தில்  வாழை பயிர் செய்வதற்காக நிலத்தை சமன்படுத்தல் பணிக்காக செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அப்போது விஜயனுடன் சிறுவன் விஜயகுமாரும் சென்றுள்ளார். 

விஜயன் டிராக்டர் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது சிறுவன் விஜயகுமார் டிராக்டர் மீது ஏறி இறங்கி விளையாடி கொண்டிருந்தார். இந்நிலையில் டிராக்டர் இயங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஜயகுமார் டிராக்டரில் இருந்து தவறி நிலத்தில் கீழே விழுந்துள்ளார். இதில் டிராக்டரில் மண் வெட்டும் எந்திரம் சிறுவனின் உடலை நசுக்கி துண்டு துண்டாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக சிறுவன் உயிரிழந்தான். 

ADVERTISEMENT

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரில் சிறுவன் சிக்கி உயிரிழந்த சம்பவம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Tags : accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT