தமிழ்நாடு

விவசாயிகளை தூண்டி போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சிகளின் முயற்சி முறியடிப்பு: எல். முருகன்

1st Dec 2020 01:20 PM

ADVERTISEMENT

 

விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழி செய்யும் வேளாண்மை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் எதிர்க்கட்சியின் தூண்டுதலால் நடத்த இருந்த போராட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், திருச்செந்தூரில் வரும் 7ஆம் தேதி நிறைவடைய உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் யாத்திரையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொள்ளவுள்ளதாக  தெரிவித்தார். 

விவசாயிகளின் பல ஆண்டு தேவைகளை கருத்தில் கொண்டு சுவாமிநாதன் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கு வழி ஏற்படும் வகையில் வேளாண் சீர்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக அவர்கள் நல்ல விலை கிடைப்பதற்காக வேறு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று அவர் கூறினார்.

ADVERTISEMENT

இந்த சீர்திருத்த சட்டத்தின் மூலமாக பல இடங்களில் சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும்.

விவசாயிகள் உற்பத்தி செய்த பொருளை வெளிநாடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய வாய்ப்பாக அமையும். விவசாயிகளுக்கு மிகுந்த பயனுள்ள திட்டமாக உள்ள இந்த திட்டம் தில்லியில் சில அரசியல் அமைப்புகள் தூண்டிவிடப்பட்டு போராட்டம் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். 

தமிழகத்திலும் விவசாயிகள் திருத்தச்சட்டத்தை திமுக உள்ளிட்ட கட்சிகள் தவறாக சித்தரித்து போராட்டத்தை தூண்ட முயற்சித்தது முறியடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். 

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி போராடும் இட ஒதுக்கீடு கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது எங்களது கருத்து என்று அவர் கூறினார். 

தலித் சமூகத்தில் ஐந்து உட் பிரிவினரை வேளாளர் என அறிவிப்பது குறித்து  சரியான அறிவிப்பு சரியான நேரத்தில் வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் 

ரஜினிகாந்த் ஒரு சிறந்த ஆன்மீகவாதி, தேசிய சிந்தனை கொண்டவர், அவர் புதிதாக அரசியல் இயக்கம் ஆரம்பித்தால் பாரதிய ஜனதா கட்சி வரவேற்கும் என்று அவர் கூறினார்.
 

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT