தமிழ்நாடு

தேர்தலுக்கான நாடகமே பா.ம.க.வின் போராட்டம்: கனிமொழி

DIN

பா.ம.கவின் போராட்டம் தேர்தலுக்கான நாடகமாகக் கருதுவதாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி ஈரோட்டில் இன்று பேட்டியளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், 

விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரசார பயணத்தை ஈரோட்டில் இன்று 2-வது நாளாக தொடங்கிய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கட்சி நிர்வாகிகள் சந்தித்தும், கலைஞர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

பின்னர்  பெரியார் - அண்ணா நினைவகத்தைப் பார்வையிட்ட கனிமொழி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. இந்த அதிமுக ஆட்சி பெரியாரின் கொள்கைக்கு எதிரான ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். வருகிற தேர்தலில் ஸ்டாலின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த கனிமொழி, ரஜினி அரசியலுக்கு வந்தால் கருத்து தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.

பா.ம.கவின் இட ஒதுக்கீடு போராட்டம் தேர்தலுக்கான நாடகமாக நான் கருதுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய கனிமொழி சமூகநீதிக்காக பா.ஜ.க எதுவும் செய்யவில்லை என்றும்  சமூக நிதிக்காக பிஜேபி எதிராகச் செயல்படுவதாகவும், இதில் திமுகவை குறை கூற பிஜேபிக்கு அருகதையில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், மு.க.அழகிரி தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளதாகவும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், அரசியலில் ஈடுபடலாம், அதுகுறித்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
திராவிடத்தை யாரும் வீழ்த்த முடியாது, சுயமரியாதை உணர்வை யாரும் வீழ்த்திட முடியாது என்றும் இது பெரியார் மண் என்று தெரிவித்த கனிமொழி அதிமுக கட்சி சுயமரியாதையை இழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT