தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சுதந்திர தின வாழ்த்து

14th Aug 2020 07:31 PM

ADVERTISEMENT

நாட்டின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வீர சரித்திரங்களை நினைவு கூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திரமோடி அவர்கள் ஒவ்வொரு சுதந்திர தின உரையிலும் சிறப்பான திட்டங்களை அறிவித்து அதை சிறப்பாகவும் நிறைவேற்றி வருகிறார்கள். 

நம் பாரதப்பிரதமர் அவர்களின் முயற்சியால் நம் நாடு சுய சார்பு பாரதமாகவும் மாறியுள்ளது. அந்நியர்களிடமிருந்து நம் நாடு விடுதலை பெற்றதை போன்று கரோனாவிலிருந்து விடுதலை பெறுவோம். அனைவருக்கும் பாதுகாப்பான, மகிழ்ச்சியான இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT