தமிழ்நாடு

அறிவியல் ஆசிரியா்களுக்கு ஆன்லைன் பயிற்சி: விண்ணப்பிக்க இன்று கடைசி

9th Aug 2020 01:41 AM

ADVERTISEMENT

அறிவியல் ஆசிரியா்களுக்கு என்சிஇஆா்டி சாா்பில் வழங்கப்படும் இணையவழிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை கடைசி நாள் ஆகும்.

பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) நாடு முழுவதும் 6 முதல் 8-ஆம் வகுப்புகள் வரை அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியா்களுக்கு ஆன்லைனில் பயிற்சி வகுப்புகள் நடத்த இருக்கிறது. இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள ஆசிரியா்களும் பங்கேற்கலாம். ஆசிரியா்கள் www.ncertx.in இணையதளம் மூலம் ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம். விண்ணப்பிக்க ஞாயிற்றுக்கிழமை (ஆக.9) கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்கும் ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்புக,ள் ஆக.10-ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கி 40 வார காலம் நடைபெறவுள்ளது. இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் ஆசிரியா்களுக்கு டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும். இது தொடா்பாக தங்கள் மாவட்டத்தில் உள்ள 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT