தமிழ்நாடு

பல்லவாடாவில் திமுக சார்பில் 750 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி

20th Apr 2020 04:10 PM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடாவில் திமுக மாவட்ட உறுப்பினர் சாரதா முத்துசாமி ஏற்பாட்டில் 750 குடும்பத்தினருக்கு அரிசி,  காய்கறிகள் வழங்கப்பட்டது.

பல்லவாடாவில் நடைபெற்ற இந்த நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்விற்கு மாவட்ட உறுப்பினர் சாரதா முத்துசாமி தலைமை தாங்கினார்.

பல்லவாடா ஊராட்சி தலைவர் லட்சுமி பன்னீர்செல்வம், மாவட்ட அவை தலைவர் பகலவன், திமுக ஒன்றிய செயலாளர் மு.மணிபாலன், மாவட்ட பிரதிநிதி கி.வே.ஆனந்தகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாதிரிவேடு என்.டி.மூர்த்தி, மாதர்பாக்கம் சீனிவாசன், மாநெல்லூர் லாரன்ஸ், ஒன்றிய உறுப்பினர் சிட்டிபாபு, ஜோதி முன்னிலை வகித்தனர்.

ADVERTISEMENT

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், துணைத் தலைவர் மாலதி குணசேகரன் பங்கேற்று பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT