தமிழ்நாடு

ஊத்தங்கரையில் தெருநாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் பலி, 17 ஆடுகள் படுகாயம்

20th Apr 2020 08:58 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அம்பேத்கர் நகரில் அலுமேலு (35)க/பெ சிவலிங்கம் வசித்து வருகிறார். இவரது தொழில் ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்து வந்தனர். 

ஆட்டு கொட்டகை வீட்டின் அருகே அமைத்து பராமரித்து வந்தனர். இந்த நிலையில் இரவு அதிகாலை நேரத்தில் ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்த போது 15 ஆடுகள் உடலில், கழுத்து, வயிறு போன்ற பகுதிகளில் குடல்கள் வெளியே வந்த நிலையில் பரிதாபகமாக இறந்து கிடந்தது. மேலும் 16 ஆடுகள் குடல்கள் தொங்கிய நிலையிலும், ரத்தம் சொட்ட சொட்ட குத்து உயிருமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது. 

உடனே பொதுமக்கள் கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த கால்நடை மருத்துவர் மகேந்திரன் பார்வையிட்டு ஆடுகளை தெரு நாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழிந்தது தெரிய வந்துள்ளது. ஆடுகளை வாழ்வதரமாக கொண்டுள்ள அலுமேலு குடும்பத்தார் ஆடுகள் இறந்ததை பார்த்து நெஞ்சை அடித்தக் கொண்டு அழுதார். 

தமிழக அரசு இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

Tags : krishnagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT