தமிழ்நாடு

சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை

22nd Sep 2019 01:16 PM

ADVERTISEMENT

 

தெற்கு தீபகற்ப பகுதியில் காணப்படும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக, தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு மழை தொடர வாய்ப்பு உள்ளது. 

திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அடையாறு, கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், ஆழ்வார்ப்பேட்டை, அம்பத்தூர், ஆவடி, கோயம்பேடு உட்பட சென்னை முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT