தமிழ்நாடு

அமேசான், நெட்ப்ளிக்சில் படங்களை வெளியிடக் கூடாது: திரையரங்கு அதிபர்கள் போர்க்கொடி

24th Dec 2019 03:56 PM

ADVERTISEMENT

 

சென்னை: ஒரு திரைப்படம் வெளியான 100 நாட்களுக்குள் அமேசான், நெட்ப்ளிக்சில் அந்தப் படங்களை வெளியிடக் கூடாது என்று திரையரங்கு அதிபர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக் கூட்டமானது செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் இயற்றப்பட்ட தீர்மானங்களாவன:

ஒரு திரைப்படம் வெளியான 100 நாட்களுக்குள் அமேசான், நெட்ப்ளிக்சில் அந்தப் படங்களை வெளியிடக் கூடாது.

ADVERTISEMENT

அவ்வாறு படத்தினை வெளியிடும் தயாரிப்பாளரின் அடுத்த படங்கள் திரையரங்கங்களில் திரையிடப்படாது.

உச்ச நடிகர்கள் தங்களது படங்கள் தோல்வியடைவதனால் ஏற்படும் நஷ்டத்தை பொறுப்புணர்ந்து ஏற்றுக்  கொள்ள வேண்டும். அதனால் பாதிக்கப்படும்  தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு அதிபர்களின்நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும்.

அதேபோல 8 சதவீத மாநில வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் திரும்பப்பெறாவிடில் மார்ச் 1 முதல் திரையரங்கங்கள் மூடப்படும்

இவ்வாறு அதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT