செய்திகள்

முதன்முதலாக இலங்கை ஒருநாள் அணியில் பதிரானா!

30th May 2023 07:52 PM

ADVERTISEMENT

 

சிஎஸ்கே அணியின் 20 வயதான இளம் பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா இலங்கையை சேர்ந்தவர். இவர் இந்தாண்டு முதன்முறையாக முழுநேர பௌலராக சிஎஸ்கேவில் களமிறங்கினார். கடந்தாண்டு ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடினார்.

பதிரானாவின் பந்து வீசும் ஸ்டைல் மலிங்காவை போலவே இருக்கும். அதனால் அவரை குட்டி மலிங்கா என ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

இதையும் படிக்க: ரிஷப் பந்த்திற்கு இரண்டாவது அறுவை சிகிச்சை தேவையில்லை! 

ADVERTISEMENT

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.  சென்னை சூப்பா் கிங்ஸ் சிறப்பாக பந்து வீசினார் பதிரானா.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டியில் இலங்கை அணியில் முதன்முறையாக மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி:

தசுன் ஷானகா (கேப்டன்), குசால் மெண்டிஸ், பதும் நிஷாங்கா, துமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, ஆஞ்சலோ மேதிவ்ஸ், தனஞ்செய டி சில்வா, சரிதா அசலங்கா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்‌ஷனா, துஷன் ஹேமந்தா, சமிகா கருணாரத்னே, துஷ்மந்த் சமீரா, மதீஷா பதிரானா, லஹிரு குமாரா, குசன் ரஜிதா.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT