செய்திகள்

கோப்பையுடன் சென்னை வந்த சிஎஸ்கே வீரர்கள்!

30th May 2023 03:20 PM

ADVERTISEMENT

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு கோப்பையுடன் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஐபிஎல் போட்டியின் 16-ஆவது சீசன் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது. சென்னைக்கு இது 5-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

இந்த ஆட்டத்தில் முதலில் குஜராத் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் சோ்த்தது. பின்னா் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட, சென்னைக்கான இலக்கு 15 ஓவா்களில் 171 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டது. அதில் சென்னை 15 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் சோ்த்தது. கடைசி இரண்டு பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் மற்றும் ஃபோரை அடுத்தடுத்து அடுத்து சென்னை அணியை ‘த்ரில்’ வெற்றி பெற வைத்தார் ஜடேஜா.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று பகல் 2.30 மணியளவில் குஜராத்திலிருந்து சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பாராட்டு விழாவானது ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT