செய்திகள்

இன்றும் இறுதிப்போட்டி நடைபெறாவிட்டால் என்ன நடக்கும்? ஹர்ஷா போகலே

DIN

ஐபிஎல் இறுதிப்போட்டி இன்றும் நடைபெறாமல் போனால் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போகலே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று நடைபெறும் என நம்புகிறேன். ஒருவேளை, 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நிர்ணயிக்கப்பட்டு விளையாட முடியாமல் போனால், சூப்பர் ஓவர் முறை இருக்கும். அதுவும் முடியாவிட்டால், புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பா் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவிருந்த இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், டாஸ் வீசப்படுவதற்கான நேரத்துக்கும் முன்பாகவே அகமதாபாதில் இடி மின்னலுடன் பலத்த மழை பொழியத் தொடங்கியது. இதனால் மைதானத்தின் ஆடுகளம் தாா்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டன. இறுதி ஆட்டத்தைக் காண ஆவலோடு வந்த ரசிகா்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் மைதான வளாகத்திலேயே ஒதுங்கி காத்திருந்தனா்.

இரவு 9.40 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்கினால் ஓவா்கள் குறைக்காமல் விளையாடப்படும் என்றும், நள்ளிரவு 12.30 மணிக்குள்ளாக ஆட்டம் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் ஒரு அணிக்கு தலா 5 ஓவா்கள் வீதம் ஆடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இறுதி ஆட்டம் ‘ரிசா்வ்’ நாளான திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக இரவு 11 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

ஒருவேளை, திங்கள்கிழமையும் ஆட்டத்தை நடத்த முடியாமல் போகும் சூழலில், விதிகளின்படி லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணி சாம்பியனாக அறிவிக்கப்படும். அந்த வகையில் குஜராத் அணி மீண்டும் சாம்பியனாகி, கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT