ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2-ஆவது எடிஷன் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம், வரும் ஜூன் 7 முதல் 11-ஆம் தேதி வரை லண்டனின் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் 12-ஆம் தேதி ‘ரிசா்வ்’ நாளாக இருக்கிறது.
இதையும் படிக்க: ஐபிஎல் 2023: பரிசுத் தொகை விவரம் - சிஎஸ்கேவிற்கு எவ்வளவு கிடைக்கும்?
ருதுராஜிக்கு ஜூன் 3,4 ஆம் தேதிகளில் திருமணம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் அவரால் இங்கிலாந்துக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாது. ஜூன் 5க்குப் பிறகு வருவதாக ருதுராஜ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பிசிசிஐ ருதுராஜிக்குப் பதிலாக மாற்று வீரராக ஜெய்ஸ்வாலை நியமித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: விராட் கோலி சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
இந்திய வீரர்களில் ஏற்கனவே இங்கிலாந்திற்கு சென்று பயிற்சி எடுத்து வருகின்றனர். இன்று ரோஹித், இஷான் கிஷனும் மே.30 அன்று சூர்யகுமார், ஷமி, கில், ஜடேஜா இங்கிலாந்து கிளம்ப உள்ளனர். ஏனெனில் இன்று ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.