செய்திகள்

கே.எல்.ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன்: பிசிசிஐ அறிவிப்பு! 

DIN

கடந்த மே மாதம் 1-ஆம் தேதி ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு பவுண்டரியை தடுப்பதற்காக ஓடும்போது ராகுலின் தொடையில் காயம் ஏற்பட்டு கீழே சரிந்தாா். வலது தொடை தசைப் பகுதியில் காயம் கண்டிருக்கும் இந்திய வீரரும், லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் கேப்டனுமான கே.எல்.ராகுல், நடப்பு ஐபிஎல் சீசன் மற்றும் எதிா்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் ஆகியவற்றிலிருந்து விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

ஐபிஎல்-இல் கே.எல்.ராகுலுக்கு பதிலாக கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிசிசிஐ உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.ரிசர்வ் வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெயதேவ் உனத்கட்: பெங்களூருவில் என்சிஏவில் பயிற்சி எடுத்து வருகிறார். இவரது தேர்வு குறித்து பின்னர் ட்தெரிவிக்கப்படுமென பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

உமேஷ் யாதவ்:  இன்னும் குணமாகாததால் கேகேஆர் அணி மருத்துவக்குழுவால் தொடர் கண்காணிப்பில் உள்ளார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா, சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ரஹானே, கேஎஸ் பரத், அஸ்வின், ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாக்குர். ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ்,ஜெயதேவ் உனத்கட், இஷான் கிஷன்.  

ரிசர்வ் வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமண உடையை மாற்றியமைத்த நடிகை சமந்தா!

ஆர்சிபியிடம் அதிர்ச்சித் தோல்வி; சன் ரைசர்ஸ் பயிற்சியாளர் பேசியது என்ன?

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

SCROLL FOR NEXT