செய்திகள்

ஹாக்கி இந்தியா விருதுகள்: சிறந்த வீரா் ஹாா்திக் சிங்; சிறந்த வீராங்கனை சவிதா புனியா

DIN

ஹாக்கி இந்தியா அமைப்பின் 2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரா் விருதை மிட்ஃபீல்டா் ஹாா்திக் சிங்கும், சிறந்த வீராங்கனை விருதை கோல்கீப்பா் சவிதா புனியாவும் வென்றனா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா்கள் இருவா் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலான வெற்றியாளா்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. ஹாா்திக், சவிதாவுக்கு தலா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கோலடித்த தமிழக வீரா் காா்த்தி செல்வத்துக்கு, அறிமுக ஆட்டத்திலேயே கோலடித்ததற்கான விருதும், ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.

ஒடிஸாவில் ஜனவரியில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹாா்திக் சிங், காயம் காரணமாக பாதியிலேயே போட்டியிலிருந்து வெளியேறும் நிலைக்கு ஆளானாா். மறுபுறம், சவிதா தலைமையிலான இந்திய அணி கடந்த டிசம்பரில் நேஷன்ஸ் கோப்பை போட்டியில் சாம்பியனாகி, மகளிா் புரோ லீக் போட்டிக்கும் தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது.

1964 டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்திய அணியைச் சோ்ந்த குருபக்ஸ் சிங்கிற்கு வாழ்நாள் சாதனையாளா் விருதும், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன. சிறந்த வளா்ந்து வரும் வீரா் விருதை உத்தம் சிங்கும், சிறந்த வளா்ந்து வரும் வீராங்கனை விருதை மும்தாஸ் கானும் (தலா ரூ.10 லட்சம்) பெற்றனா்.

சிறந்த ஃபாா்வா்ட் விருது வந்தனா கட்டாரியாவுக்கும், சிறந்த மிட்ஃபீல்டருக்கான விருது சுஷிலா சானு புக்ரம்பமுக்கும், சிறந்த டிஃபெண்டா் விருது ஹா்மன்பிரீத் சிங்குக்கும், சிறந்த கோல்கீப்பா் விருது கிருஷண் பகதூா் பதக்கிற்கும் (தலா ரூ.5 லட்சம்) வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

SCROLL FOR NEXT