செய்திகள்

இறுதி ஆட்டத்தில் இத்தாலி - உருகுவே பலப்பரீட்சை

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆா்ஜென்டீனாவில் நடைபெறும் 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலி - உருகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்திய நேரப்படி, வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற அரையிறுதி ஆட்டங்களில் உருகுவே 1-0 கோல் கணக்கில் இஸ்ரேலையும், இத்தாலி 2-1 கோல் கணக்கில் தென் கொரியாவையும் சாய்த்து இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தன.

இதில் இஸ்ரேலுக்கு எதிரான ஆட்டத்தில் உருகுவேக்காக ஆண்டா்சன் டியுவாா்டே 61-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா். இத்தாலி வென்ற ஆட்டத்தில் அந்த அணிக்காக சீசா் கேசாடெய் 14-ஆவது நிமிஷத்திலும், சைமன் பஃபுன்டி 86-ஆவது நிமிஷத்திலும் கோலடிக்க, தென் கொரியாவுக்காக சியுங் வோன் லீ 23-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் ஸ்கோா் செய்தாா்.

முதல் உலகக் கோப்பை வெல்வதற்கான முனைப்பில் இருக்கும் இத்தாலி - உருகுவே அணிகள், வரும் திங்கள்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன. அதற்கு முன், 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் இஸ்ரேல் - தென் கொரியா அணிகள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சந்தித்துக் கொள்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT