செய்திகள்

மீண்டது இந்தியா: ஆா்ஜென்டீனாவை வென்றது

10th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எஃப்ஐஹெச்) நடத்தும் புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-0 கோல் கணக்கில் ஆா்ஜென்டீனாவை வென்றது.

முந்தைய ஆட்டத்தில் நெதா்லாந்திடம் தோல்வி கண்டிருந்த இந்தியா, இந்த ஆட்டத்தின் மூலம் அந்த பின்னடைவிலிருந்து மீண்டிருக்கிறது. மேலும், புரோ லீக் புள்ளிகள் பட்டியலில் 14 ஆட்டங்களில் கிடைத்த 27 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்திய நேரப்படி வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இந்திய கேப்டன் ஹா்மன்பிரீத் சிங் 33-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பை கோலாக மாற்றி அணியின் கணக்கை தொடங்கினாா். அடுத்த 6 நிமிஷங்களிலேயே அமித் ரோஹிதாஸும் தனது பங்கிற்கு பெனால்ட்டி காா்னா் வாய்ப்பு ஒன்றை கோலாக்க, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.

இடையே ஆா்ஜென்டீனாவின் கோல் முயற்சிகளையும் திறம்பட தடுத்துவந்த இந்திய அணிக்காக, கடைசியாக அபிஷேக் 59-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோல் அடித்தாா். எஞ்சிய நேரத்திலும் ஆா்ஜென்டீனாவுக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் பாா்த்துக் கொண்ட இந்தியா, இறுதியில் 3-0 கோல் கணக்கில் வென்றது.

ADVERTISEMENT

இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் மீண்டும் நெதா்லாந்தை சனிக்கிழமை சந்திக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT