செய்திகள்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!

8th Jun 2023 09:28 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. ஆட்டத்தின் இரண்டாம் நாளான இன்று ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்களும் எடுத்தனர். 

இதையும் படிக்க: ஆழ்துளைக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் களமிறங்கினர். இந்திய அணிக்கு தொடக்கம் ஏமாற்றமாகவே அமைந்தது. ரோஹித் சர்மா 15 ரன்களிலும், ஷுப்மன் கில் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ADVERTISEMENT

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய புஜாரா மற்றும் விராட் கோலியும் பெரிதாக சோபிக்கவில்லை. புஜாரா மற்றும் கோலி இருவரும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 71 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட் மற்றும் கேமரூன் கிரீன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

இதையும் படிக்க: இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சிறந்த வீரரை உருவாக்க ஆர்வம் காட்டும் விராட் கோலி!

இந்திய அணி வீரர்கள் அஜிங்கியா ரஹானே மற்றும் ரவீந்திர ஜடேஜா களத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 350-க்கும் அதிகமான ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT