செய்திகள்

தற்போது காயம் எப்படி இருக்கிறது?: பென் ஸ்டோக்ஸ் கூறிய தகவல்! 

4th Jun 2023 04:02 PM

ADVERTISEMENT

இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 92 போட்டிகளில் விளையாடி 5712 ரன்கள் எடுத்துள்ளார். 12 சதங்கள், 28 அரைசதங்கள் அடங்கும். 

டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (109) அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஸ்டோக்ஸ். மெக்குல்லம் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ஆனதும் இங்கிலாந்து அணி அசாத்தியமான சாதனை படைத்துள்ளது. 13 டெஸ்ட் போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

இதையும் படிக்க: சிஎஸ்கே வீரர் ருதுராஜ் திருமணம்: யார் இந்த உட்கர்ஷா பவார்? 

அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ADVERTISEMENT

இதையும் படிக்க: இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி: ஆப்கானிஸ்தானுக்கு 324 ரன்கள் இலக்கு!

அடுத்து முக்கியமான ஆஷஸ் தொடர் ஜூன் 16இல் தொடங்குகிறது. இதற்காக பயிற்சியில் ஏடுபட்டு வருகிறார் பென் ஸ்டோக்ஸ். இதனால் ஐபிஎல் போட்டியிலிருந்து சீக்கரமே கிளம்பி இங்கிலாந்து வந்துவிட்டார். தற்போது அளித்த பேட்டியில் ஸ்டோக்ஸ் கூறியதாவது:  

நான் தவறான முறையில் கீழே விழுந்துவிட்டேன். எனது உடல் எடை முட்டியின் மீது குவிந்து விட்டது. அதிகமாக முட்டியை வளைத்துவிட்டேன். மேலும் எனக்கு 32 வயதாகிறது அதனால்கூட இப்படி ஆகியிருக்கலாம். நான் இன்று காலையில் பந்து வீசினேன். ஐபிஎல்க்கு பிறகு முதன்முறையாக பந்து வீசுகிறேன். பந்த்ய் வீசுவதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. எந்தப் பிரச்னைகளுமில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT