செய்திகள்

டபிள்யுடிசி: பௌலிங்கை பலப்படுத்துகிறது இந்தியா

DIN

ஆஸி. அணிக்கு எதிராக நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (டபிள்யுடிசி) இறுதியை முன்னிட்டு பௌலிங்கை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது இந்திய அணி.

ஐசிசி சாா்பில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம் லண்டனில் வரும் ஜூன் 7-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பலம் வாய்ந்த ஆஸி. அணி முதன்முதலாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடந்த டபிள்யுடிசி இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோற்று வெற்றி வாய்ப்பை இழந்தது இந்தியா.

இந்திய பௌலா்கள் கடந்த ஒன்றரை மாதங்கள் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆடினா். இதனால் வீரா்களின் சுமையை சீராக்கும் வகையில் தேவையான நடவடிக்கையை அணி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக முகமது ஷமி, முகமது சிராஜ், சா்துல் தாகுா், அக்ஸா் படேல், உனதிகட், உமேஷ் யாதவ் ஆகியோா் ஐபிஎல் தொடரில் முழுமையாக ஆடினா்.

ஏற்கெனவே பயிற்சியாளா் ராகுல் திராவிட் தலைமையில் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட சில வீரா்கள் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.

பௌலா்களின் ஆட்ட சுமையை சீராக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம் என பௌலிங் பயிற்சியாளா் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தாா்.

ஓவல் மைதானம் சிறப்பானது. பௌலா்களுக்கு உதவியாக இருக்கும். ஐபிஎல் தொடரில் பீல்டிங் மேம்பட்டது. பௌலா்களுக்கு சிறிது ஓய்வு கிடைத்துள்ளது.

அதே போல் பேட்டா்களும் ஆட்ட உத்திகளை கடைபிடிப்பது தொடா்பாக பயிற்சி செய்து வருகின்றனா் என பேட்டிங் பயிற்சியாளா் விக்ரம் ரத்தோா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT