செய்திகள்

சொந்த மண்ணில் தோற்கடிக்க முடியாத இந்தியா: சாதிக்குமா நியூசிலாந்து?

DIN

கடந்த 10 வருடங்களாக இந்தியாவில் 55 தொடர்கள் நடைபெற்றுள்ளன. டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் விளையாடி இரு நாடுகளுக்கு எதிராக மட்டுமே தோல்வியடைந்துள்ளது இந்திய அணி. அந்தளவுக்குச் சொந்த மண்ணில் ராஜாவாகத் திகழ்கிறது.

2015-ல் ஒருநாள், டி20 என இரு தொடர்களிலும் இந்தியாவைத் தோற்கடித்தது தென்னாப்பிரிக்கா. அப்போது இந்திய அணியின் கேப்டன், தோனி. இதன்பிறகு  2019-ல் இந்தியாவுக்கு வந்த ஆஸ்திரேலிய அணி, டி20, ஒருநாள் தொடர்களை வென்று அசத்தியது. அப்போது இந்திய அணியின் கேப்டன், கோலி.

2019 மார்ச்சுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய ஒரு தொடரிலும் தோற்கவில்லை. 

நியூசிலாந்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது. முதல் டி20யை வென்ற நியூசிலாந்து அணி, அடுத்த ஆட்டத்தில் தோல்வியடைந்தது. 3-வது டி20 ஆட்டம் ஆமதாபாத்தில் நாளை நடைபெறவுள்ளது. 

இந்தியாவில் இதுவரை விளையாடிய தொடர்களில் ஒருமுறை மட்டும் ஓர் ஆட்டம் கொண்ட டி20 தொடரை வென்றது நியூசிலாந்து. மற்றபடி, இந்தியாவில் அந்த அணி மற்றொரு தொடரை வென்றதில்லை. 

இந்தத் தொடரில் கிடைக்கும் அனுபவம் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிக்கு உதவும் என்கிறார் நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர். ஆனால் டி20 தொடரை வென்று சாதனை படைக்க வேண்டும் என நியூசிலாந்து ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆமதாபாத்தில் பரபரப்பான டி20 ஆட்டம் ரசிகர்களுக்கு அமைய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT