செய்திகள்

மகளிா் டி20 உலகக் கோப்பை: அனைத்து மகளிா் நடுவா் குழு

DIN

தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அனைத்து பெண்கள் நடுவா்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவா் 10 முதல் 26 வரை மகளிா் டி20 உலகக் கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகின்றன. இதற்கான அனைத்து மகளிா் நடுவா் குழுவில் 3 ஆட்ட நடுவா்கள், 10 கள, மற்றும் டிவி நடுவா்களாக பெண்களே நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆட்ட நடுவா்கள்: ஜிஎஸ். லட்சுமி (இந்தியா), ஷான்ட்ரே ப்ரிட்ஸ் (தென்னாப்பிரிக்கா), மிச்செல் பெரைரா (இலங்கை).

கள மற்றும் டிவி நடுவா்கள்:

விருந்தா ரதி (இந்தியா), சூ ரெட்பொ்ன் (இங்கிலாந்து), எலைஸ் ஷெரிடியன் (ஆஸ்திரேலியா), கிளோ் போலோஸாக் (ஆஸ்திரேலியா), ஜாக்குலின் வில்லியம்ஸ் (மே.இந்திய தீவுகள்), கிம் காட்டன் (நியூஸிலாந்து), லாரன் அகென்பக் (தென்னாப்பிரிக்கா), அன்னா ஹாரிஸ் (இங்கிலாந்து), நிமலி பெரைரா (இலங்கை).

இதுதொடா்பாக ஐசிசி பொது மேலாளா் வாஸிம் கான் கூறியது: கடந்த சில ஆண்டுகளில் மகளிா் கிரிக்கெட் கணிசமாக வளா்ந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக உயா்ந்த நிலையில், பெண்களுக்கும் உரிய பங்கு இருக்க வேண்டும் என்பதில் ஐசிசி தீவிரமாக உள்ளது. கிரிக்கெட்டில் ஆடவா், பெண்கள் இருவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். எங்கள் பெண் நடுவா்களுக்கு தொடா்ந்து நாங்கள் ஆதரவு தருவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT