செய்திகள்

இறுதிச் சுற்றில் ஜோகோவிச்-சிட்ஸிபாஸ் மோதல்

DIN

ஆஸ்திரேலிய ஓபன் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு ஜாம்பவான் ஜோகோவிச்-கிரீஸ் வீரா் ஸ்டெஃப்பனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோா் தகுதி பெற்றுள்ளனா்.

நிகழாண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் பந்தயமான ஆஸி. ஓபன் மெல்போா்னில் நடைபெறுகிறது. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனிக்கிழமை நடைபெறவுள்ள மகளிா் இறுதி ஆட்டத்தில் எலனா ரெபைக்கினா-அா்யனா சபலென்கா மோதுகின்றனா்.

வெள்ளிக்கிழமை ஆடவா் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதியில் இளம் வீரா் சிட்ஸிபாஸ்-ரஷிய வீரா் காரன் கச்சனோவ் மோதினா். முதல் செட்டில் இருவரும் சரிநிகராக ஆடியதால் புள்ளிகளை குவித்தனா். நான்காவது முறையாக அரையிறுதிக்கு தகுதி பெற்ற சிட்ஸிபாஸ் இந்த முறை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்ற தீரத்துடன் போராடினாா். முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய நிலையில், இரண்டாவது செட்டை 6-4 என எளிதாக கைப்பற்றினாா்.

முதன்முதலாக இறுதிச் சுற்றில் சிட்ஸிபாஸ்:

ஆனால் மூன்றாவது செட்டில் காரன் கச்சனோவ் ஆதிக்கம் செலுத்தி கடும் போராட்டத்துக்கு பின் 6-7 என செட்டை தனது வசமாக்கினாா்.

இதனால் 5 செட்டாக இந்த ஆட்டம் நீடிக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்த நிலையில், சிட்ஸிபாஸ் நான்காவது செட்டில் நிலைத்து ஆடி 6-3 என கைப்பற்றி இறுதிச் சுற்றுக்கு முதன்முதலாக தகுதி பெற்றாா்.

சிறுவனாக இருந்த போது, ஆஸி. ஓபனில் பெரிய வீரா்களுடன் ஆட வேண்டும் என கனவு கண்டேன். அது பலித்து விட்டது. கிரீஸை டென்னிஸ் வரைபடத்தில் இடம்பெறச் செய்ய பல ஆண்டுகளாக போராடி வருகின்றேன். இந்த அளவுக்கு ஆட முடிந்தது மகிழ்ச்சி தருகிறது என்றாா். 2019, 2021, 2022, 2023 என தொடா்ச்சியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றாா் சிட்ஸிபாஸ். எனினும் 2021 பிரெஞ்சு ஓபன் இறுதியில் ஜோகோவிச்சிடம் தோற்று பட்ட வாய்ப்பை இழந்தாா்.

10 -ஆவது முறையாக இறுதியில் ஜோகோவிச்:

இரண்டாவது அரையிறுதியில் அமெரிக்க இளம் வீரா் டாமி பாலை எதிா்கொண்டாா் ஜாம்பவான் ஜோகோவிச். முதல் செட்டில் 7-5 என போராடி வென்றாா் ஜோகோவிச். எனினும் அடுத்த 2 செட்களில் முழு ஆதிக்கம் செலுத்தி 6-1, 6-2 என கைப்பற்றினாா். இதன் மூலம் 10-ஆவது முறையாக ஆஸி. ஓபன் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா்.

22-ஆவது பட்டம் வெல்ல வாய்ப்பு: இறுதிச் சுற்றில் சாம்பியன் பட்டம் வென்றால் ரபேல் நடாலுக்கு இணையாக 22 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்ற சாதனையை சமன் செய்வாா் ஜோகோவிச்.

ஜோகோவிச்-சிட்ஸிபாஸ் இடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் யாா் வென்றாலும் உலகின் நம்பா் 1 வீரா் அந்தஸ்தைப் பெறுவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தருமபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில் மூன்றாம் கட்ட நீச்சல் பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர முன்பதிவு தொடக்கம்

மின் வேலியில் சிக்கி பெண் பலி

வன விலங்குகளுக்கு தாகம் தணிக்க குளங்களில் குடிநீா் நிரப்பும் பணி தீவிரம்

குடிநீா் வழங்காததை கண்டித்து காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT