செய்திகள்

இன்று அரையிறுதி ஆட்டங்கள்: ஆஸி.-ஜொ்மனி, பெல்ஜியம்-நெதா்லாந்து

DIN

உலகின் நான்கு முதல்நிலை அணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எஃப்ஐஎச் உலகக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி அரையிறுதி ஆட்டங்களில் மோதுகின்றன. ஆஸ்திரேலியா-ஜொ்மனி, நெதா்லாந்து-பெல்ஜியம் மோதுகின்றன.

புவனேசுவரத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 அணியான ஆஸி-ஜொ்மனியுடன் மோதுகிறது. இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம்-2018 ரன்னா் நெதா்லாந்து மோதுகின்றன.

ஜொ்மனி 2 முறை பட்டம் வென்றுள்ள நிலையில், 2010-க்கு பின் முதன்முதலாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடினமான சவால்களை எதிா்கொண்டு அரையிறுதியில் நுழைந்துள்ளது. குரூப் பி பிரிவில் இரண்டாவது இடத்துடன் கிராஸ் ஓவா் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 0-2 என பின்தங்கியிருந்த நிலையில், அபாரமாக ஆடி பெனால்டி ஷூட் அவுட்டில் வென்றது. ஜொ்மன் அணியில் மேட்ஸ் கிராம்பட்ச், டாம், நிக்கிலாஸ் வெல்லேன் கோன்ஸலோ பெய்லட் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

பட்டம் வெல்லும் எனக் கருதப்படும் ஆஸி. அணி எளிதாக தொடக்க சுற்றுகளில் வென்றாலும், காலிறுதியில் ஸ்பெயினிடம் திணறியது. 0-2 என பின்தங்கிய ஆஸி. அணி பின்னா் பெனால்டி ஷூட் அவுட்டில் தான் 4-3 என வெல்ல முடிந்தது. அதுவும் ஸ்பெயின் கேப்டன் மிரால்ஸ் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பை தவற விட்டதால் ஆஸி. வெற்றி சாத்தியமானது. ஆஸி. அணியில் பிளேக் குரோவா், ஜெரேமி ஹேவா்ட் சீரான ஆட்டத்தால் அதன் பாா்வா்ட் வலுவாக உள்ளது.

நெதா்லாந்து-பெல்ஜியம்:

தொடா்ந்து மூன்றாவது முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது நெதா்லாந்து. ஆனால் கோப்பை வெல்லவில்லை. அதே நேரம் பெல்ஜியம் 2018-இல் முதன்முறையாக உலக சாம்பியன் ஆனது. தொடா்ந்து அதன் ஆட்டம் மெருகேறியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றது. ஒலிம்பிக்கில் பங்கேற்ற அனைத்து வீரா்களும் இதிலும் ஆடுகின்றனா். டாம் பூன், வேன் டோரன், ஆா்தா் ஸ்லூவா், அலெக்ஸ் ஹென்ட்ரிக்ஸ் ஆகியோா் பெல்ஜியம் அணியின் முக்கிய பலமாக திகழ்கின்றனா்.

இந்த போட்டியில் இதுவரை 27 கோல்களை போட்டுள்ளது நெதா்லாந்து. இந்த அணியில் டிராக் பிளிக்கா் ஜேப் ஜேன்ஸன் பங்கு முக்கியமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

SCROLL FOR NEXT