செய்திகள்

ஐபிஎல் ஏலம்: தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அதிக வரவேற்பு!

DIN

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து 80 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்பட்டார்கள். 

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். இதன்மூலம் ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். கேம்ரூன் கிரீனை ரூ. 17.50 கோடிக்கு மும்பையும் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்கு லக்னெளவும் தேர்வு செய்தன. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பிரபல இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடிக்குத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்கக் கூடிய ஒரு வீரர் சிஎஸ்கேவுக்குக் கிடைத்துள்ளார்.

இந்நிலையில்  ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஐபிஎல் 2023 ஏலம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 மினி ஏல நிகழ்ச்சியை 40.5 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்தார்கள். இந்தமுறை 50.6 மில்லியன் பார்வையாளர்கள் நிகழ்ச்சியைப் பார்த்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பார்வையாளர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் கூடியுள்ளது. மேலும் ஏலம் தொடர்பான நிகழ்ச்சிகளை 1.59 பில்லியன் நிமிடங்களுக்குப் பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். இதுவும் 10 சதவீதம் கூடியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

ஒளியிலே தெரிவது தேவதையா...!

ஆண் மனதை அழிக்க வந்த சாபம்!

2 ஆம் கட்ட வாக்குப் பதிவு: கேரளத்தில் 9 மணி நிலவரப்படி 11.98% வாக்குகள் பதிவு

SCROLL FOR NEXT