செய்திகள்

’பல் துலக்குவது கூட மகிழ்ச்சியாக...’- விபத்திற்குப் பிறகு ரிஷப் பந்த்!

IANS

கடந்த டிசம்பர் 30 அன்று உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா். உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது.  

கடந்த மாதம், முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனால் ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்தால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவருடனான ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் நேர்காணல் எடுத்தது.அதில் இப்போது எப்படி இருக்கிறது, தினமும் என்ன செய்கிறீர்கள், கிரிக்கெட்டை எவ்வளவு மிஸ் செய்கிறீர்கள், உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் போன்ற கேள்விகளை கேட்டதற்கு ரிஷப் பந்த் கூறியதாவது: 

முன்பை விடவும் தற்போது நன்றாக இருக்கிறேன். தினமும் காலையில் எழுந்து அட்டவணையின்படி பிசியோதெரபிஸ்ட் சொல்வதுபடி உடற்பயிற்சி பின்பு ஓய்வு பின்பு 2வது செஷன், 3வது செஷன் என இடைவிடாமால் செய்கிறேன். அடிக்கடி பழங்கள், நீராகாரம் எடுத்துக் கொள்கிறேன். நான் எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறேன் என்பதை சொல்ல முடியவில்லை. ஆனால் இந்த நேரத்தில்தான் நான் வாழ்க்கையில் ஒன்று கற்றுக் கொண்டேன். காலையில் எழுந்து பல் துலக்கும்போது கூட மகிழ்ச்சியாக இருக்கிறது. நாம் இதையெல்லாம் சாதாரணம் என கடந்து சென்றுவிடுகிறோம். உண்மையில் இது பொக்கிஷம் என்பதை விபத்திற்குப் பிறகே உனர்கிறேன். 

கிரிக்கெட்டை மிகவும் மிஸ் செய்கிறேன். விரைவில் நலமடைந்து விளையாட காத்திருக்கிறேன். எனது ரசிகர்களுக்கு இந்திய அணிக்கும், ஐபிஎல்லில் தில்லி அணிக்கும் உங்களது ஆதரவினை தெரிவியுங்கள். உங்களது அன்பினால் நான் விரைவில் நலமடைவேன். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT