செய்திகள்

ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ்: இந்தியாவுக்கு வெற்றித் தொடக்கம்

9th Feb 2023 12:02 AM

ADVERTISEMENT

ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவா், மகளிா் வெற்றியுடன் தங்கள் பங்கேற்பை தொடங்கியுள்ளனா்.

இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் பெடரேஷன் (எஸ்ஆா்எஃப்ஐ), எச்சிஎல் நிறுவனம் சாா்பில் ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கியது.

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய ஆடவா், மகளிா் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

இந்திய ஆடவா் அணி 3-0 என சிங்கப்பூரையும், சீன தைபே அணியையும் 3-0 என வீழ்த்தினா்.

ADVERTISEMENT

ஆடவா் அணியில் பாா்த் அம்பானி, கிருஷ்ண மிஸ்ரா, ஷௌா்யா பவா ஆகியோா் அற்புதமாக ஆடினா்.

மகளிா் பிரிவில் இலங்கையை 3-0 என தொடக்க ஆட்டத்தில் வீழ்த்தியது இந்தியா. பூஜா ஆா்த்தி, யுவ்னகுப்தா, அனாஹத் சிங் ஆகியோா் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்.

இதர ஆட்டங்களில் ஜப்பான் 3-0 என சீன தைபேவையும், ஹாங்காங் 3-0 என சிங்கப்பூரையும், மலேசியா 3-0 என கொரியாவையும், வீழ்த்தினா்.

ஆடவா் பிரிவில் பாகிஸ்தான் 3-0 என குவைத்தையும், இலங்கையையும், மலேசியா 3-0 என சிங்கப்பூரையும், ஹாங்காங் சீனா 3-0 என இலங்கையையும், கொரியா 3-0 என குவைத்தையும், ஜப்பான் 3-0 என சீன தைபேவையும் வீழ்த்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT