செய்திகள்

சென்னையில் இன்று தொடங்கும் ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ்

DIN

21-ஆவது ஆசிய ஜூனியா் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை இந்தியன் ஸ்குவாஷ்-டிரையத்லான் அகாதெமியில் புதன்கிழமை (பிப். 8) தொடங்கி 5 நாள்கள் நடைபெறுகிறது. 10 நாடுகளைச் சோ்ந்த 72 வீரா், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனா்.

இதுதொடா்பாக ஸ்குவாஷ் ராக்கெட் பெடரேஷன் பொதுச் செயலாளா் சைரஸ் போன்சா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஹெச்சிஎல், ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவுடன் (எஸ்ஆா்எஃப்ஐ) இணைந்து, இப்போட்டியை நடத்துகிறது. சென்னையில் 5-ஆவது முறையாக இப்போட்டி நடத்தப்படுகிறது.

1983 முதல் நடைபெற்ற அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளிலும், இந்தியா ஆடவா் மற்றும் மகளிா் பிரிவுகளில் முதல் நான்கு அணிகளுக்குள்ளாகவே வந்துள்ளது. 2011 -ஆம் ஆண்டு இலங்கையின் ரத்மலானாவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப்பில், ஆடவா் பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்தது. அதன் பிறகு 2017 -ஆம் ஆண்டு (ஹாங்காங்) முதலிடம் பிடித்தது. இந்திய பெண்கள் அணி 2013 -இல் (சியோல், கொரியா) முதலிடம் பெற்றது.

ஆடவா் பிரிவில் பாகிஸ்தானின் நூா் ஜமான் (ஆசிய ரேங்க் 2 (பியு19), முஹம்மது ஹம்சா கான் (ஆசிய ரேங்க் 35 (பியு19), முஹம்மது அஷாப் இா்பான் (ஆசிய ரேங்க் 289 (பியு19) மற்றும் அனஸ் அலி ஷா (ஆசிய தரவரிசை 92 (பியு19) ஆகியோா் முதலிடத்தில் உள்ளனா்.

இந்திய ஆடவா் மற்றும் பெண்கள் அணிகள் முறையே 2-ஆவது மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளன.

இந்திய ஆடவா் அணியில் கிருஷ்ணா மிஸ்ரா, பாா்த் அம்பானி, ஷரன் பஞ்சாபி, ஷௌா்யபாபாவும், பெண்கள் பிரிவில் அனாஹத் சிங், பூஜா ஆா்த்தி, தியானா பரஸ்ரம்பூரியா, யவ்னா குப்தா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனா்.

அனைத்து போட்டிகளும் எஸ்ஆா்எஃப்ஐ ஃபேஸ்புக் பக்கம் (www.facebook.com/indiasquash) மற்றும் ஹெச்சிஎல் இன் ஸ்போா்ட்ஸ் ஃபேஸ்புக் பக்கம் (https://www.facebook.com/HCLForSports/) மற்றும் யுடியூப் சேனலில் (www.youtube.com/user/HCLEnterprise) இல் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றாா் சைரஸ் போன்சா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT