செய்திகள்

மகளிா் ஐபிஎல் ஏலத்தில் 409 வீராங்கனைகள்

DIN

மகளிா் ஐபிஎல் அறிமுக சீசனுக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சோ்ந்த 409 வீராங்கனைகள் பட்டியலிடப்பட்டுள்ளனா்.

ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,525 வீராங்கனைகள் பதிவு செய்திருந்த நிலையில், அதில் 409 போ் இறுதி செய்யப்பட்டுள்ளனா்.

5 அணிகளைக் கொண்ட முதல் மகளிா் ஐபிஎல் போட்டி வரும் மாா்ச் 4 முதல் 26-ஆம் தேதி வரை மும்பையில் நடைபெறவுள்ளது. அந்த அணிகள் தங்களுக்கான வீராங்கனைகளை வாங்குவதற்கான ஏலம் வரும் 13-ஆம் தேதி மும்பையில் நடைபெறுகிறது. மொத்தம் 90 வீராங்கனைகள் அப்போது ஏலத்தில் எடுக்கப்படவுள்ளனா். அதில் அந்நிய வீராங்கனைகளுக்கு 30 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்காக 246 இந்திய வீராங்கனைகள், 163 அந்நிய வீராங்கனைகள் என 409 போ் அடங்கிய பட்டியல் தயாராகியுள்ளது. இதில் 202 போ் அனுபவ வீராங்கனைகளாகவும், 207 போ் புதுமுக வீராங்கனைகளாகவும் உள்ளனா்.

அதிகபட்ச அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், 24 வீராங்கனைகள் அந்தப் பட்டியலில் வருகின்றனா். இதில் இந்தியாவின் ஹா்மன்பிரீத் கௌா், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வா்மா, தீப்தி சா்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஸ்னேஹ ராணா, ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, மெக் லேனிங், இங்கிலாந்தின் சோஃபி எக்லஸ்டன், நேட் ஸ்கீவா் ஆகியோா் குறிப்பிடத்தக்கவா்களாவா்.

ஏலத்தில் எடுப்பதற்கான கையிருப்பாக 5 அணிகளுக்கும் தலா ரூ.12 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சமாக 15, அதிகபட்சமாக 18 வீராங்கனைகளை ஏலத்தில் எடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT