செய்திகள்

‘அஸ்வினை எதிர்கொள்வது எப்படி?’- பிரபல ஆஸி. பேட்டரின் வியூகம்! 

DIN

இந்தியா ஆஸி. அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடா் நாகபுரியில் 9-ஆம் தேதி தொடங்குகிறது. ஆஷஸ் கோப்பை தொடா் போல், ஆஸி.-இந்திய அணிகளுக்கு இடையே பாா்டா்-கவாஸ்கா் கோப்பை போட்டி கௌரவமிக்கதாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஆஸி.கைப்பற்றி 19 ஆண்டுகள் ஆகின்றது குறிப்பிடத்தக்கது. 

ரவி அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனாமாக இருந்து வருகிறார். அவரைப் போலவே பந்து வீசும் நபரைக் கொண்டு வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்தது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலானது.  அந்தளவுக்கு தமிழக வீரர் அஸ்வினின் பந்து வீச்சு திறன் உள்ளது. 

இந்நிலையில் ஆஸி.யின் பிரபல தொடக்க பேட்டர் உஸ்மான் கவாஜா நேர்காணல் ஒன்றில் கூறியதாவது: 

அஸ்வின் ஒரு துப்பாக்கி மாதிரியான வீரர். மிகவும் திறமைசாலி. சிறிய சிறிய அதிகமான வேறுபாடுகள் உடைய பந்து வீச்சாளர். கிறிஸை நன்றாக உபயோகப்படுத்தும் பந்து வீச்சாளர். ஒரு ஆஃப்-ஸ்பின்னரை எப்படி விளையாட வேண்டுமென முன்னர் கேட்டிருந்தால் எனக்கு தெரிந்திருக்காது. ஆனால் இப்போது தேவையான அளவிற்கு கற்றுக்கொண்டுள்ளேன். 

ஆடுகளத்தில் பந்து திரும்பும். அது முதல் நாளிலா, 2வது நாளிலா தெரியாது. அவர் அதிகமான ஓவர்களை வீசுவார். நிச்சயமாக இது நல்ல சவாலாக இருக்கும். அவர் எப்படி பந்து வீசினாலும் நான் அவரை எப்படி விளையாடப் போகிறேன், ரன்கள் குவிக்கப்போகிறேன் என்பதே முக்கியம். அவரை அதிக நேரம் விளையாடினால் அவர் நிச்சயமாக அவரது திட்டங்களை மாற்றுவார். 

இந்தியா போன்ற துணைக்கண்டத்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதானதென பலரும் நினைக்கிறார்கள்.ஆனால் புதியப் பந்தில் ஸ்பின் மற்றும் மாறுபாடுகள் அதிகமாக இருக்கும்.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT