செய்திகள்

ஆஸி. வீரரின் சிக்கல் தீர்ந்தது!

2nd Feb 2023 11:31 AM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர், பிப்ரவரி 9 முதல் தொடங்குகிறது. எந்தவொரு பயிற்சி ஆட்டத்திலும் விளையாடாமல் முதல் டெஸ்டில் களமிறங்குகிறது ஆஸி. அணி.

முதல் டெஸ்ட் நாகபுரியில் நடைபெறுகிறது. எனினும் பெங்களூரில் ஆரம்பக்கட்டப் பயிற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. உஸ்மான் கவாஜாவைத் தவிர ஆஸி. வீரர்களும் அனைவரும் நேற்று பெங்களூருக்கு வந்தார்கள். 

பிரபல பேட்டர் உஸ்மான் கவாஜா மட்டும் நுழைவு இசைவு (விசா) கிடைக்காத காரணத்தால் இந்தியாவுக்கு உடனடியாக வரமுடியாத சூழல் ஏற்பட்டது. விசாவுக்கான ஏற்பாடுகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வந்தாலும் கவாஜாவுக்கு மட்டும் விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் அவரில்லாமல் ஆஸி. அணி இந்தியாவுக்கு வந்தது. 

ADVERTISEMENT

இந்நிலையில் கவாஜாவின் சிக்கல் தீர்ந்து, அவருக்கு விசா கிடைத்து விட்டது. இதையடுத்து சிட்னியிலிருந்து பெங்களூருக்கு இன்று வரவுள்ளார். விமானத்திலிருந்து ஒரு இன்ஸ்டகிராம் பதிவையும் கவாஜா வெளியிட்டுள்ளார். இதனால்  முதல் டெஸ்டில் தகுந்த பயிற்சியுடன் கவாஜா பங்கேற்பதில் எந்தவொரு சிக்கலும் தற்போது இல்லை. 

ADVERTISEMENT
ADVERTISEMENT