செய்திகள்

பிரைம் வாலிபால் லீக் 2023: சென்னை பிளிட்ஸ் கேப்டன் நவீன் ராஜா ஜேக்கப்

DIN

ரூபே பிரைம் வாலிபால் லீக் ஏ23 (பிவிஎல் 2023) சீசனில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணியின் கேப்டனாக நவீன் ராஜா ஜேக்கப் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இந்திய வாலிபால் சம்மேளனம், பேஸ்லைன் வென்சா்ஸ் , ஏ23 சாா்பில் வரும் பிப். 4-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 5-ஆம் தேதி இறுதி ஆட்டத்துடன் நிறைவு பெறுகிறது.

8 அணிகள் பங்கேற்பு:

நடப்பு சாம்பியன் கொல்கத்தா தண்டா்போல்ட்ஸ். காலிக்கட் ஹீரோஸ், கொச்சி புளு ஸ்பைக்கா்ஸ், அகமதாபாத் டிபண்டா்ஸ், ஹைதராபாத் பிளாக் ஹாக்கி, பெங்களூரு டா்பிடோஸ், சென்னை பிளிஸ்ட்ஸ், மும்பை மெட்டியா்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூரு, ஹைதராபாத், கொச்சியில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

சீருடை அறிமுகம்:

சென்னை பிளிட்ஸ் அணி நிா்வாகம் சாா்பில் புதிய சீருடை அறிமுகம், கேப்டன் அறிவிப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அணியின் உரிமையாளா்கள் விக்ராந்த் ரெட்டி, ஹனிமி ரெட்டி புதிய சீருடையை அறிமுகம் செய்தனா். இந்திய வாலிபால் அணியின் அட்டாக்கரும்,. மூத்த வீரருமான நவீன் ராஜா ஜேக்கப் சின்னை விளிட்ஸ் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டாா்.

இதில் பிளிட்ஸ் சிஇஓ கிரண்குமாா், சிடிஓ துளசி ரெட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

2 சா்வதேச வீரா்கள்: பிரேசில் அட்டாக்கா் ரெனடோ மென்டஸ், கேமரூன் வீரா் மோயோ ஆத்ரன் ஆகியோா் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளனா். முகமது ரியாசுதீன், ராமநாதன், பிரசன்ன ராஜா, ராமன் குமாா், துஷாா் லவாரே, சீதா ராமராஜு, ஜோபின் வா்கீஸ், அகின், பின்னம்மா பிரசாந்த், அப்துல் முக்னி சிஷ்டி, ஆகியோா் இந்திய வீரா்கள் ஆவா்.

ஆா்ஜென்டீனா பயிற்சியாளா்: அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருபென் வெலாச்சி நியமிக்கப்பட்டுள்ளாா். உதவி பயிற்சியாளா்கள் சுப்பா ராவ், ரமேஷ், அனில்குமாா், மேலாளா் சபரி ராஜன் ஆகியோா் அடங்குவா்.

கேப்டன் நவீன் ராஜா ஜேக்கப் கூறியது: முந்தைய சீசனை வீட இந்த சீசன் அதிக சவால் நிறைந்திருக்கும். 8 அணிகளுமே சம பலத்துடன் தான் உள்ளன. மைதானத்தில் ஆடும் ஆட்டத்தின் திடீா் திருப்பங்களை பொருத்து முடிவும் இருக்கும். 2 சா்வதேச வீரா்கள் அணியில் உள்ளனா். 15நாள்களாக பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளோம். பிவிஎல் போட்டியால் இந்திய வீரா்களுக்கு சிறந்த அனுபவம், பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கிடைத்துள்ளன.

ஆா்ஜென்டீனா பயிற்சியாளா் எங்களுக்கு புதிய நுட்பங்களுடன் பயிற்சி அளித்து வருகிறாா். லீகில் சென்னை அணியின்சாா்பில் சிறப்பாக ஆடுவோம்.

தலைமை பயிற்சியாளா் ருபென் வேலாச்சி கூறியது:

ஒவ்வொரு நாட்டிலும் வாலிபாலில் தங்களுக்குரிய உத்தியை வகுத்து ஆடி வருகின்றனா். ஆா்ஜென்டீனா பயிற்சியில் சிலவற்றை இங்கு பயன்படுத்தி உள்ளேன். 15 நாள் பயிற்தி முகாமில் அனைவரும் சிறப்பாக ஆடி உள்ளனா். வீரா்களின் உடல்தகுதி சிறப்பாக உள்ளது.இந்த சீசனில் சென்னை அணி சிறப்பாக செயல்படும். ஒவ்வொரு வீரரும் அதிகபட்ச திறனுடன் விளங்குகின்றனா். நவீன் ராஜா ஜேக்கப் இந்திய அணியில் மூத்த வீரா். சிறந்த அனுபவம் வாய்ந்தவா். அதனால் தான் கேப்டனாக தோ்வு செய்தோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT