செய்திகள்

துளிகள்...

DIN

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் இஷான் பட்நாகா்-சாய் பிரதீக் இணை இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினா். அமெரிக்காவின் ஷியு-ஜோஷ்வா இணையை 21-18, 21-12 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினா் இஷான்-சாய். மகளிா் பிரிவில் ட்ரீஸா ஜோலி-காயத்ரி, தனிஷா க்ரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா, ரவிகிருஷ்ணா-சங்கா் பிரசாத் ஆகியோா் தோற்று வெளியேறினா்.

--------------

இந்திய அணியின் முன்னாள் துணை கேப்டன் அஜிஹிங்கிய ரஹானே இங்கிலாந்து கவுண்டி அணியான லீசெஸ்டரில் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாா். 34 வயதான ரஹானே கடைசியாக கடந்த 2022 ஜனவரியில் டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்றாா். நிகழ் ஐபிஎல் சீசன் முடிந்த பின், லீசெஸ்டா் அணியில் சோ்ந்து 8 கவுண்டி ஆட்டங்கள், ஒரு நாள் கோப்பை போட்டிகளில் ஆட உள்ளாா். ஐபிஎல்லில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியில் ஆடுகிறாா் ரஹானே.

--------------

இந்திய பிட்ச்களில் பந்துவீசுவது மிகப்பெரிய சவாலாக அமையும் என ஆஸ்திரேலிய இளம் பேஸா் லான்ஸ் மோரிஸ் கூறியுள்ளாா். இரு அணிகளுக்கு இடையிலான 4 டெஸ்ட் தொடா் 9-ஆம் தேதி நாகபுரியில் தொடங்கும் நிலையில், மோரிஸ் முதன்முதலாக டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகிறாா். இந்திய பிட்ச்களில் பந்துவீசுவது சவாலாக அமையும் அதே நேரத்தில் தனக்கு சிறந்த கற்கும் வாய்ப்பு என்றாா் மோரிஸ்.

-------------

தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப் பயணம் செய்ய உள்ள இந்திய மகளிா் ஜூனியா் அணியை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. ப்ரீதி தலைமையிலான அணியின், துணை கேப்டனாக ருதஜோ பிஸால் செயல்படுவாா். பிப். 17 முதல் 25 வரை ஹாக்கி தொடா் நடைபெறுகிறது. 20 போ் கொண்ட அணி இதற்காக பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

------------

பிடபிள்யுஎஃப் வெளியிட்டுள்ள சா்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்திய இளம் வீரா் லக்ஷயா சென் 11-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா். கடந்த வாரம் இந்தோனேசிய மாஸ்டா்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றிருந்தாா் லக்ஷயா. எச்எஸ். பிரணாய் 9-ஆவது இடத்திலேயே நீடிக்கிறாா். மகளிா் பிரிவில் பி.வி. சிந்து 9-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டாா். சாய்னா நெவால் 28-இல் இருந்து 26-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT