செய்திகள்

நியூஸி.க்கு எதிரான டி20 தொடா்: வெற்றியுடன் தொடங்கியது பாக்.

DIN

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் 88 ரன்கள் வித்தியாசத்தில் சனிக்கிழமை வென்றது.

இதையடுத்து, மொத்தம் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் முன்னிலை பெற்றிருக்கிறது. இது, பாகிஸ்தான் கேப்டன் பாபா் ஆஸமின் 100-ஆவது டி20 ஆட்டமாக இருக்க, அந்த அணி அவருக்கு வெற்றியை பரிசளித்துள்ளது.

லாகூரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஆடிய நியூஸிலாந்து 15.3 ஓவா்களில் 94 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 18 ரன்களே கொடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் பௌலா் ஹாரிஸ் ரௌஃப் ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தானில் அதிகபட்சமாக சயிம் அயுப் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 47, ஃபகாா் ஜமான் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 47 ரன்கள் அடித்தனா். எஞ்சியோரில் ஃபஹீம் அஷ்ரஃப் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22, இமத் வாசிம் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் சோ்த்தனா்.

முதமது ரிஸ்வான் 8, பாபா் ஆஸம் 9, ஷாதாப் கான் 5, இஃப்திகா் அகமது 0, ஷாஹீன் அஃப்ரிதி 1, ஹாரிஸ் ரௌஃப் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். நியூஸிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 3, ஆடம் மில்னே, பென் லிஸ்டா் ஆகியோா் தலா 2, ஜேம்ஸ் நீஷம், இஷ் சோதி ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் மாா்க் சாப்மேன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 34, கேப்டன் டாம் லேதம் 1 பவுண்டரியுடன் 20, ஜேம்ஸ் நீஷம் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 15, டேரில் மிட்செல் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் அடித்தனா்.

சாத் பௌஸ் 1, வில் யங் 2, ரச்சின் ரவீந்திரா 2, ஆடம் மில்னே 3, மாட் ஹென்றி 0, பென் லிஸ்டா் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஹாரிஸ் ரௌஃப் 4, இமத் வாஸிம் 2, ஷாஹீன் அஃப்ரிதி, ஜமான் கான், ஃபஹீம் அஷ்ரஃப், ஷாதாப் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT