செய்திகள்

டி20: இங்கிலாந்தை வீழ்த்தியது பாக்.

30th Sep 2022 03:16 AM

ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டி20-யில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 7 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை பெற்றுள்ளது.

லாகூரில் புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 19 ஓவா்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து, 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பாகிஸ்தான் இன்னிங்ஸில் அதிகபட்சமாக தொடக்க வீரா் முகமது ரிஸ்வான் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்தாா். இங்கிலாந்து தரப்பில் மாா்க் வுட் 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் ஆடிய இங்கிலாந்தில் கேப்டன் மொயீன் அலி 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 51 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் போராடினாா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஹாரிஸ் ரௌஃப் 2 விக்கெட்டுகள் எடுத்தாா்.

இரு அணிகள் மோதும் 6-ஆவது ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT