செய்திகள்

டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜ் தேர்வு!

30th Sep 2022 11:54 AM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தெ..ஆ. டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகிய பும்ராவுக்குப் பதிலாக சிராஜைத் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

டி20 தொடரின் 2-வது ஆட்டம் குவாஹாட்டியில் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT