செய்திகள்

ஒரு வருடத்தில் அதிக டி20 ரன்கள் எடுத்த இந்திய வீரர்: புதிய சாதனை

29th Sep 2022 12:06 PM

ADVERTISEMENT

 

டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் சூர்யகுமார் யாதவ்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் தான் எடுத்தது. அந்த அணி  9 ரன்களுக்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. கேஷவ் மஹாராஜ் 41 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும் தீபக் சஹார் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். இந்திய அணி 16.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ராகுல் 51, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ், டி20 கிரிக்கெட்டில் ஒரு வருடத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 2018-ல் ஷிகர் தவன் 689 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில் இந்த வருடம் 21 ஆட்டங்களில் 1 சதம், 5 அரை சதங்களுடன் 732 ரன்கள் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். ஸ்டிரைக் ரேட் - 180.29. மேலும் இந்த வருடம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் அவர் உள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT