செய்திகள்

இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரிக்கு பிஃபா கௌரவம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரியின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டி சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிஃபா) கௌரவித்துள்ளது.

சா்வதேச கால்பந்து அரங்கில் போா்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 117 கோல்களுடன் முதலிடத்திலும், ஆா்ஜென்டீனா கேப்டன் லயோனல் மெஸ்ஸி 90 கோல்களுடன் இரண்டாம் இடத்திலும், 131 ஆட்டங்களில் 84 கோல்களை அடித்து சுனில் சேத்ரி மூன்றாம் இடத்திலும் அதிக கோல்களை அடித்த வீரா்கள் என்ற சாதனையுடன் உள்ளனா்.

ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோா் சா்வதேச அளவில் அதிகம் அறியப்பட்ட நட்சத்திரங்களாக திகழ்கின்றனா். இந்நிலையில் 37 வயதான இந்திய கேப்டன் சுனில் சேத்ரியும் அவா்களுக்கு அடுத்து அதிக கோல்களை அடித்த வீரா் என்ற சிறப்பைப் பெற்றுள்ளாா். அவரை கௌரவிக்கும் வகையில் பிஃபா கேப்டன் ஃபென்டாஸ்டிக் என்ற 3 எபிசோடுகள் அடங்கிய தொடரை வெளியிடுகிறது.

இந்திய அணி இதுவரை பிஃபா உலகக் கோப்பை போட்டியில் தகுதி பெறாவிட்டாலும், சுனில் சேத்ரியின் சிறப்பான செயல்பாடுகளுக்காக இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT