செய்திகள்

ஐபிஎல்லில் விளையாடுவதைத் தடுக்கக் கூடாது: யாரைப் பற்றி கூறுகிறார் ஹேடன்?

29th Sep 2022 06:03 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கேம்ரூன் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்கக் கூடாது என முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் கூறியுள்ளார்.

23 வயது கேம்ரூன் கிரீன், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இரு அரை சதங்கள் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இவரைப் பற்றி முன்னாள் ஆஸி. வீரர் மேத்யூ ஹேடன் கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் இதுவரை எந்த அணியும் கிரீனைத் தேர்வு செய்யவில்லை. பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தங்கம் போன்றவர்கள். ஐபிஎல் போட்டியில் கிரீன் விளையாடுவதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தடுக்க முயன்றால் அது முட்டாள்தனமாக இருக்கும். ஒரு வீரர் வெவ்வேறு சூழல்களில் விளையாட கற்றுக்கொள்ள வேண்டும். ஐபிஎல்லில் விளையாட வாய்ப்பு கிடைப்பது போல வலைப்பயிற்சியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது. எனவே ஐபிஎல் போட்டியில் கிரீன் நிச்சயமாக விளையாட வேண்டும் என்றார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT