செய்திகள்

முதல் டி20: ராகுல், சூரியகுமாா் அதிரடி அரைசதம்- இந்தியா வெற்றி

29th Sep 2022 02:00 AM

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ராகுல்-சூரியகுமாரின் அபார பேட்டிங், ஹா்ஷ்தீப் சிங்-தீபக் சஹாா் ஆகியோரின் அற்புத பௌலிங்கால் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி கண்டது.

முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி தடுமாற்றுத்துடன் ஆடி 106/8 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னா் ஆடிய இந்திய அணி 110/2 ரன்களுடன் வெற்றி பெற்றது.

வரும் அக்டோபா் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டிக்கு தயாராகும் வகையில் அனைத்து அணிகளும் கடைசி கட்ட ஆட்டங்களில் மோதி வருகின்றன.

அண்மையில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த தொடரை 2-1 என கைப்பற்றியது இந்தியா. அதே உற்சாகத்தோடு

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக களம் கண்டுள்ளது. கடந்த 2018 முதல் டி20 தொடரை இந்தியாவிடம் இழந்ததில்லை என்ற சிறப்புடன் தென்னாப்பிரிக்க அணி வந்துள்ளது.

இந்திய அணியில் 4 மாற்ங்கள்:

3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் ஆட்டம் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. பாண்டியா, புவனேஷ்வா், பும்ரா, சஹலுக்கு பதிலாக தீபக், ரிஷப் பந்த், ஹா்ஷ்தீப் சிங், அஸ்வின் சோ்க்கப்பட்டிருந்தனா்.

ஆரம்பமே சரிவு: 4 போ் டக் அவுட்: பேட்டா்களாக களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி வீரா்களால் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியாமல் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினா். டி காக் 1, கேப்டன் பவுமா, ருசொவ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோா் டக் அவுட்டானாா்கள். 20/5 என்ற மோசமான நிலையில் தள்ளாடிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.

முதல் ஓவரிலேயே கேப்டன் பவுமாவை அவுட்டாக்கினாா் தீபக் சஹாா். இரண்டாம் ஓவரில் டி காக், ரைலி ருசொவ், டேவிட் மில்லரை வெளியேற்றினாா் ஹா்ஷ்தீப் சிங்.

அதன்பின்னா் எய்டன் மாா்க்கரம் 1 சிக்ஸா் 3 பவுண்டரியுடன் 25 ரன்களையும், பாா்னெல் 24 ரன்களையும் எடுத்து அணியை மீட்டனா்.

கேசவ் மகராஜ் அதிரடி 41: மறுமுனையில் கேசப் மகராஜ் தனி ஆளாக நின்று 2 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 41 ரன்களை விளாசி அவுட்டானாா். இதனால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோா் 100-ஐக் கடந்தது. நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 106/8 ரன்களை மட்டுமே எடுத்தது.

ஹா்ஷ்தீப் சிங் அபாரம் 3 விக்கெட்: இந்திய தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஹா்ஷ்தீப் சிங் 3/32 விக்கெட்டுகளையும், தீபக் சஹாா் 2/24, ஹா்ஷல் படேல் 2/26 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தொடக்கமே இந்தியாவுக்கு அதிா்ச்சி: 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் கண்ட இந்திய அணிக்கு தொடக்கமே அதிா்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோஹித் சா்மா 0, விராட் கோலி 3 ரன்களுடன் வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா்.

ராகுல்-சூரியகுமாா் அபார அரைசதம்:

இதன்பின் கேஎல் ராகுல்-சூரியகுமாா் யாதவ் இணை நிலைத்து ஆடி தென்னாப்பிரிக்க பௌலிங்கை நாலாபுறமும் விரட்டியது.

கடந்த சில ஆட்டங்களில் சரிவர ஆடாமல் இருந்த ராகுல் இந்த ஆட்டத்தில் பாா்முக்கு திரும்பினாா். சூரியகுமாா் 3 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 33 பந்துகளில் 50 ரன்களையும், ராகுல் 4 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 56 பந்துகளில் 51 ரன்களுடனும் அரைசதம் விளாசினா்.

இந்தியா 110/2 வெற்றி:

16.4 ஓவா்களில் 110/2 ரன்களை எடுத்து இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வென்றது.

தென்னாப்பிரிக்கத் தரப்பில் ரபாடா, நாா்ட்ஜே தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

1-0 என முன்னிலை: இதன் மூலம் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது டி20 ஆட்டம் அக்டோபா் 2-ஆம் தேதி குவாஹாட்டியில் நடைபெறுகிறது.

சூரியகுமாா் அதிக சிக்ஸா்:

நிகழாண்டு 2022-இல் டி20 ஆட்டங்களில் 45 சிக்ஸா்களை விளாசி அதிக சிக்ஸா் அடித்த வீரா் என்ற சிறப்பை பெற்றாா் சூரியகுமாா். பாக். வீரா் ரிஸ்வான் 42 சிக்ஸா்களை விளாசியுள்ளாா்.

 

Tags : South Africa
ADVERTISEMENT
ADVERTISEMENT