செய்திகள்

தெ.ஆ. டி20 தொடர்: இந்திய அணியில் இந்த மாற்றங்களா?

27th Sep 2022 11:22 AM

ADVERTISEMENT

 

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டி20 தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது.

டி20 தொடருக்கான இந்திய அணி முன்பே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தவிர்க்க முடியாத காரணங்களால் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

முதுகு வலி காரணமாக தீபக் ஹூடா டி20 தொடரிலிருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திருவனந்தபுரத்துக்குச் சென்ற இந்திய அணியில் தீபக் ஜூடா இடம்பெறவில்லை. கரோனா காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடாத முகமது ஷமி, இன்னும் குணமாகாததால் இந்த டி20 தொடரிலும் விளையாட வாய்ப்பில்லை என அறியப்படுகிறது. இதையடுத்து இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஷாபாஸ் அஹமது, ஷ்ரேயஸ் ஐயர் என இருவரும் சேர்க்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

இந்த மாற்றங்கள் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT