செய்திகள்

ஐபிஎல்: சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராகப் பிரபல முன்னாள் வீரர் தேர்வு

3rd Sep 2022 12:00 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் 2023 போட்டிக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக 2013 முதல் 2019 வரை முதலில் பணியாற்றினார் ஆஸி. முன்னாள் வீரர் டாம் மூடி. அந்தக் காலக்கட்டங்களில் 5 முறை பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2016-ல் ஐபிஎல் போட்டியை வென்றது. 2021-ல் சன்ரைசர்ஸ் அணியின் இயக்குநராக மூடி நியமிக்கப்பட்டார். இந்த வருடம் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். எனினும் கடந்த இரு வருடங்களாக சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் போட்டியில் மிக மோசமாக விளையாடியது. 2021-ல் 3 வெற்றிகள் மட்டுமே பெற்ற சன்ரைசர்ஸ் அணி, 2022-ல் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தையே பிடித்தது. கடந்த இரு வருடங்களில் 28 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 18 தோல்விகள், ஒரு டை என ஐபிஎல் போட்டியின் பலவீனமான அணியாகவே சன்ரைசர்ஸ் இருந்தது.  

இதையடுத்து சன்ரைசர்ஸ் - டாம் மூடி என இரு தரப்பும் பிரிந்து செல்ல முடிவெடுத்தன. 2023 ஜனவரியில் தொடங்கவுள்ள ஐஎல்டி20 போட்டியில் டெசர்ட் வைபர்ஸ் அணியின் இயக்குநராக டாம் மூடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில் பிரபல முன்னாள் வீரர் பிரையன் லாரா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகராகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் லாரா பணியாற்றினார். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT