செய்திகள்

இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்

7th Oct 2022 06:04 AM

ADVERTISEMENT

 மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் வெள்ளிக்கிழமை சந்தித்துக்கொள்கின்றன.

இரு அணிகளும் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், இந்தியா மூன்றிலும் வென்று நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறது. என்றாலும், ஆசிய அளவில் இந்தியாவுக்கு ஒரளவுக்கு சவால் அளிக்கும் அணியாக பாகிஸ்தான் இருப்பதால், இந்த ஆட்டத்துக்கு இந்தியா திட்டமிட்டுத் தயாராகியிருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டி20 ஃபாா்மட்டில் இந்தியா எப்போதுமே பாகிஸ்தானை எளிதாகவே வென்று வந்திருக்கிறது. கடைசியாக விளையாடிய காமன்வெல்த் போட்டிகள் உள்பட கடந்த 5 முறையுமே இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றிருக்கிறது. பேட்டிங், பௌலிங் என எதிலுமே குறைசொல்லும் நிலை இந்திய அணியில் தற்போது இல்லை.

இதனிடையே, வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் தாய்லாந்து - பாகிஸ்தானையும் (4 விக்கெட்டுகள்), வங்கதேசம் - மலேசியாவையும் (88 ரன்கள்) வென்றன.

ADVERTISEMENT

இன்றைய ஆட்டம்

இந்தியா - பாகிஸ்தான்

சைலெட்

நண்பகல் 1 மணி

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

ADVERTISEMENT
ADVERTISEMENT