செய்திகள்

கடைசி டி20: இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு! 

4th Oct 2022 09:00 PM

ADVERTISEMENT

இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையேயான கடைசி டி20 ஆட்டத்தில் இந்தியாவிற்கு 228 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி இன்று இந்தூரில் நடைபெறுகிறது. ஏற்கனவே தொடரை இந்திய அணி 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஒவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரூசோவ் 48 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 8 சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். டி காக் 43 பந்துகளில் 68 ரன்களும், டேவிட் மில்லர் 5 பந்துகளில் 19 ரன்களும் எடுத்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT