செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பை டி20: மலேசியாவுக்கு எதிராக 181 ரன்கள் குவித்த இந்திய அணி

3rd Oct 2022 03:12 PM

ADVERTISEMENT

 

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் மலேசியாவுக்கு எதிராக 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்துள்ளது இந்திய அணி.

முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொள்கிறது. இலங்கைக்கு எதிராக விளையாடிய இந்திய அணியிலிருந்து மந்தனா, பூஜா, ஸ்னேக் ராணா, ரேணுகா சிங் ஆகிய நான்கு வீராங்கனைகள் இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக மேகனா, கிரண், மேக்னா சிங், ராஜேஸ்வரி ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். மலேசியா தனது முதல்  ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

ஷெஃபாலி வர்மாவும் மேகனாவும் இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அளித்தார்கள். 13.5 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தார்கள். ஷெஃபாலி வர்மா 46, மேகனா 69 ரன்களுக்க்கு ஆட்டமிழந்தார்கள். ஷெஃபாலி வர்மா இன்று மூன்று சிக்ஸர்களை அடித்தார். இந்திய அணி   20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT