செய்திகள்

டி20 உலகக் கோப்பையிலிருந்து பும்ரா விலகல்: பிசிசிஐ 

3rd Oct 2022 09:34 PM

ADVERTISEMENT

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு நீக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த பும்ரா, முதல் டி20 ஆட்டத்தில் இடம்பெறவில்லை. சமீபகாலமாக அவருக்குத் தொந்தரவு தரும் முதுகு வலி மீண்டும் ஏற்பட்டதையடுத்து தெ.ஆ. டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் பும்ரா விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி அக்டோபர் 6 அன்று ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது. அக்டோபர் 13 வரை பெர்த்தில் பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி, பிரிஸ்பேனுக்குச் சென்று ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. 

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக கூறியதாவது:

ADVERTISEMENT

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ மருத்துவக் குழு நீக்கியுள்ளது. விரிவான மதிப்பீடு மற்றும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா முதலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மாஸ்டர்கார்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து விலகினார். மார்க்யூப் போட்டிக்கான அணியில் ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக பிசிசிஐ விரைவில் நியமிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT